" alt="" aria-hidden="true" />
திருவண்ணாமலை அருகே உள்ள கவுத்தி மற்றும் வேடியப்பன் மலையில் காட்டுத் தீ
பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் கிராம மக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனம்
திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி சாலையில் அமைந்துள்ளது கவுத்தி மற்றும் வேடியப்பன் மலைப்பகுதிகளிள் இரும்புத்தாது அதிகமாக உள்ள பகுதியாகும் மேலும் இந்த மலையில் வனப்பகுதியில் சுற்றிலும் காப்புக்காடு அமைந்துள்ள இடத்தில் மான், முயல், காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ள வன பகுதியாகும் இந்நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் திடீரென்று மலைகளில் மளமளவென காட்டு தீ பற்றியது
" alt="" aria-hidden="true" />
இது அறிந்த கிராம மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் செடிகளை கொண்டு பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் பல்வேறு வகையான மூலிகை மரங்கள் அரிய வகை செடிகள் முற்றிலும் எரிந்து நாசமானது இந்த மலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் அல்லது மலைப்பகுதியில் சென்று பீடி சிகரெட் பற்ற வைத்த வத்திகுச்சியை அணைக்காமல் போட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா என வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்