" alt="" aria-hidden="true" />
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு பரபரப்பு
சென்னை அண்ணா மேம்பாலம் என்பது சென்னையின் இதயப்பகுதியாகும். இதன் அருகில் தான் அமெரிக்க தூதரகம் உள்ளது. நட்சத்திர விடுதிகளும் ஏராளமாக உள்ளன. பல முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
சென்னையின் அனைத்து பகுதியையும் இணைக்கும் முக்கியமான பாலம் ஆகும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பாலங்களில் இதுவும் ஒன்று.
இந்நிலையில் காமராஜர் அரங்கத்திற்கு அருகே மாலை சுமார் 4.30 மணி அளவில் மர்ம பொருள் பலத்த சத்தத்துடன் வெடித்திருக்கிறது. இந்த வெடிச்சத்தத்தின் காரணமாக அருகில் இருந்த கார் கண்ணாடிகள் உடைந்திருக்கின்றன
இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். மர்ம நபர் ஒருவர் அண்ணா மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு சென்றிருக்கிறார். இதுவே வெடித்து சிதறி இருக்கிறது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த செயலை செய்தவரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்